சென்னை: மங்கோலியா நாட்டில் நடைபெற்ற 21-வது ஆசிய தனிநபர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த சவிதா ஸ்ரீ பாஸ்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வாழ்த்துச் செய்தி: மங்கோலியா நாட்டின் தலைநகரான உலான்படோரில் நடைபெற்ற21-வது ஆசிய தனிநபர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2026-ல் தங்கப் பதக்கம் வென்றதோடு, 2027 FIDE மகளிர் உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றுள்ள சென்னையைச் சேர்ந்த செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீ பாஸ்கர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள சவிதா ஸ்ரீ பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்வதோடு, தமிழ்நாட்டு விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் அனைத்து முயற்சிகளுக்கும் இந்த அரசு எப்போதும் உறுதுணையாக நிற்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.