திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெருவாயல் பகுதியில் டி.ஜெ.எஸ்.  மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 11-ம் வகுப்பில் சேர்ந்த புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி மற்றும் 10, 12-ம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும், பாடப் பிரிவுகளில் நூறு சதவிகிதம் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியும்,நூறு சதவீத தேர்ச்சி பெற

சிறப்பாக பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி என முப்பெரும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.  டி ஜெ எஸ் பொறியியல் கல்லூரி கலையரங்க வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் மேலாண்மை இயக்குனரும்,செயலாளருமான டி.ஜெ.ஆறுமுகம் தலைமை தாங்கினார். டி.ஜெ.எஸ்.கல்விக்குழுமத்தின் துணைத் தலைவர் டி.ஜெ.தேசமுத்து, பள்ளியின் தாளாளர் டாக்டர் ஏ.பழனி முன்னிலை வகித்தார்.அனைவரையும் பள்ளியின்  முதல்வர் பி.ஞானப்பிரகாசம் வரவேற்றார். இதில்,சிறப்பு விருந்தினர்களாக டி.ஜே.எஸ். கல்விக்குழுமத்தின் தலைவரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான கல்வி நெறி காவலர் டி.ஜெ.கோவிந்தராஜன்,  பூந்தமல்லி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். 

இதன்பின்னர், புதிய மாணவர்களுக்கு நோட்டு-புத்தகம் அடங்கிய புத்தகப்பை,கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும், சிறப்பாக பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும்-அயராது பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கும் என ரொக்க பரிசு தொகை மொத்தம் ரூ.1,84,500 வழங்கினர். இந்நிகழ்ச்சியில், இயக்குனர்கள் ஏ.விஜயகுமார், ஏ.கபிலன், டி.தினேஷ், டி.ஜே.எஸ்.ஜி.தமிழரசன், உறுப்பினர்கள் எஸ்.சண்முகசுந்தரம், ஆர்.ஜெயக்குமார்,ஏ.ராஜேஷ், டி.ஜெ.எஸ்  இன்ஜினியரிங் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெ.பிரகாஷ்,டி.ஜெ.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வி.லட்சுமிபதி, டி.ஜெ.எஸ் பப்ளிக் பள்ளி முதல்வர் சூ.கஸ்பார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.முடிவில்,நிர்வாக அதிகாரி எஸ்.ஏழுமலை அனைவருக்கும் நன்றி கூறினார்.

Related

“"கற்கை நன்று கிராமக் கல்வி கட்டளை" சார்பில் மாணவர்களுக்கு கல்விச்சீர்!”