தேனி-கம்பம்: கீர்த்தி சக்கரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு உள்ளூர் மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் முன்னாள் ராணுவத்தினர் தொழிற்சங்கத்தினர் வானவேடிக்கை  தாரை தப்பட்டை உலக மலர்மாலை, சால்வை அணிவித்து  உற்சாக வரவேற்பு அளித்தனர். 

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் லென்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம். இவர் இந்திய ராணுவத்தில் காஷ்மீர் பகுதியில் 34 ராஷ்ட்ரிய ரைபிள் பிரிவில் பணியாற்றி வருகின்றார். 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி தெற்கு காஷ்மீர் பகுதியான குல்காம் பகுதியில் தீவிரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொழுது ஐந்து தீவிரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் லென்ஸ் நாயக் மீனாட்சிசுந்தரம் மீது தீவிரவாதிகள் சுட்டதில் வலதுதோள்பட்டை மற்றும் வாய் பகுதியில் துப்பாக்கிகள் குண்டுகள் பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்டது.

அந்த நிலையிலும் மீனாட்சி சுந்தரம் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு  ஐந்து தீவிரவாதிகளை சுட்டுக்கொன்று தனது குழுவை காப்பாற்றினார். இந்த இணையற்ற வீர தீர செயலினை பாராட்டியும் அவரை கவுரவிக்கும் விதமாக  இந்திய அரசு கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று கீர்த்தி சக்கரா விருதினை அறிவித்தது.  

2026 ஆம் ஆண்டு இந்திய அரசு  7 நபர்களுக்கு கீர்த்தி சக்கர விருது வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி சேர்ந்த லென்ஸ் நாயக் மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கும் கீர்த்தி சக்கரா விருது வழங்கப்பட்டது. கடந்த ஜூன் 8 ஆம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரபெளதி முர்மு, லென்ஸ் நாயக் மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கு கீர்த்தி சக்கரா விருது வழங்கி கௌரவித்தார்.

விருது பெற்ற ராணு வீரர் லென்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவரது சொந்த கிராமமான கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி கிராமத்திற்கு இன்று பிற்பகல் வருகை புரிந்தார். வருகை புரிந்த லென்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு கிராம மக்கள், உறவினர்கள், நண்பர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஊர் முக்கிய பிரமுகர்கள், பள்ளி குழந்தைகள், என கிராம மக்களை ஒன்று சேர்ந்து தாரை தப்பட்டை முழங்க, வான வேடிக்கைகள் வெடிக்க, மலர் மாலை, பொன்னாடை போர்த்தி கௌரவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

இந்திய நாட்டின் உயரிய விருதான கீர்த்தி சக்கரா விருது தன் கிராமத்து ராணுவ வீரருக்கு  கிடைத்தது கிராம மக்களிடையே எல்லையற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related

“ஸ்ரீ மூகாம்பிகா தேவி கோயிலுக்கு சென்ற முதல்வர் ஜோசப் விஜய் | வீடியோ காட்சி”