தேனி-சீலையம் பட்டி: தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா பிரத்யங்கிரா தேவி திருக்கோவிலில் எரிசக்தித்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சுவாமி தரிசனம் செய்தார்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சீலையம்பட்டியில் அமைந்துள்ளது பிரத்யங்கிரா தேவி திருக்கோவில். இத்திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இப்பகுதியில் விளங்கி வருகிறது. திருக்கோவிலில் அமாவாசை தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மேலும் இத்திரு கோவிலில்  வாராகி அம்மன் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களின் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று திருக்கோவிலுக்கு தமிழ்நாடு எரிசக்தி துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை புரிந்தார். 

தேனி மாவட்டத்தில் இன்று நடக்கக்கூடிய பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தேனி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள சிடிஆர் நிர்மல் குமார் இன்று தேனி மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். காலையில்  வைகை அணை பகுதியில் ஆய்வினை மேற்கொண்டு விட்டு அதனைத் தொடர்ந்து சின்னமனூர் அருகே உள்ள சீலையப்பட்டியில் அமைந்துள்ள  பிரத்யங்கிரா தேவி திருக்கோவிலுக்கு வந்து அம்மனை மனம் உருகி தரிசித்தார். அதனைத் தொடர்ந்து வராகி அம்மன் மற்றும்  பரிவார தெய்வங்களையும் வணங்கி விட்டு கோவில் நிர்வாகத்தினரிடம் சிறிது நேரம் உரையாடினார்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்த  அமைச்சருடன் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தைச் சார்ந்த மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வருகை புரிந்திருந்தனர். அமைச்சருக்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில்  பரிவட்டங்கள் கட்டி சிறப்பு மரியாதைகள் செய்யப்பட்டது. சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு தேனி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக  அமைச்சர் புறப்பட்டுச் சென்றார்.

Related

““பாஜகவை விமர்சித்தால் ஆட்சிக்கு ஆபத்து வருமென பயமா?” - விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி”