சென்னை: சென்னை எழிலகம் மாநில அவசரகால செயல்பாட்டு மையம்ததில்  (12 ஜூன் 2026) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். 

தென்மேற்கு பருவமழை மற்றும் பேரிடர் முன்னெச்சரிக்கை பேரிடர் நிதியாக மத்திய அரசு தற்போது ₹1,000 கோடி பேரிடர் மேலாண்மை நிதியை வழங்கியுள்ளது.  தமிழக அரசுக்குத் தேவையான இதர நிதிகள் குறித்து, வருகிற ஜூன் 11 அன்று (முன்னதாக) டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய் மத்திய அரசிடம் முன்கூட்டியே கேட்டுப் பெற்றுள்ளார். தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நீலகிரி போன்ற மலை மாவட்டங்களில் நிலச்சரிவு போன்ற பேரிடர்களை எதிர்கொள்ள ஹெலிகாப்டர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. 

மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை பெரிய அளவில் இல்லாததால், அணைக்கு மிகக் குறைவாகவே நீர் வந்து கொண்டிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் மட்டும் பருவமழை கூடுதலாகப் பெய்துள்ளது. ரேஷன் கார்டுகள் வழங்குதல் மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களின் பலன்கள் மக்களுக்கு எவ்விதத் தாமதமும் இன்றி எளிதாகக் கிடைப்பது குறித்து அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

பத்திரப்பதிவுத் துறையில் நிலவும் தேக்க நிலையை நீக்கத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், பத்திரப்பதிவு செய்தவுடனேயே பொதுமக்களுக்கு உடனடியாக பட்டாக்கள் கிடைக்க புதிய வழிவகை செய்யப்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) "இந்தியா கூட்டணியில்" இணையுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "இது குறித்து முதலமைச்சர் விஜய் அவர்களே இறுதி முடிவை எடுப்பார்" என்று அமைச்சர் பதிலளித்தார். 

பத்திரிகை சுதந்திரம் என்பது எப்போதும் வரவேற்கத்தக்கது; ஆனால் அது தனிப்பட்ட நபர் மீதான விமர்சனமாக மட்டும் சுருங்கிவிடக் கூடாது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

Related

““பாஜகவை விமர்சித்தால் ஆட்சிக்கு ஆபத்து வருமென பயமா?” - விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி”