தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித். இவரின் தந்தை 2023ம் ஆண்டு உடல்நலக்குறைவால் மறைந்த நிலையில் தற்போது தாயாரும் காலமானார். அவரது மறைவு செய்தி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான அஜித்குமாரின் தாயார் மோகினி வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித். இவருக்கு அனுப் குமார், அனில்குமார் என இரு சகோதரர்கள் உள்ளனர். கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதி அஜித்தின் தந்தை பி.சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் காலமானார். இந்த சூழலில் அஜித்தின் தாயார் மோகினி இன்று உடல்நலக்குறைவால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள அஜித்தின் இல்லத்தில் அவரது தாயாரின் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அஜித் தற்போது துபாயில் இருப்பதால் அவர் உடனடியாக சென்னை திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வயது மூப்பு காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாகவும் தனது 84 வயது மோகினி உயிரிழந்ததார்.
இதனிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் பதிவில், “அன்புச் சகோதரர் அஜித்குமார் அவர்களின் தாயார் மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை. அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்” என தெரிவித்துள்ளார்.
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரும் , கார் பந்தய வீரருமான சகோதரர்
திரு. #AjithKumar அவர்களின்
தாயார் திருமதி. மோகினி மணி அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
பாசமிகு தாயாரை இழந்து வாடும் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களுக்கும்,
அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திருமதி. மோகினி மணி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். எனக்குறிப்பிட்டுள்ளார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.