ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையம் எல்லையில், 

ஏடிஎம் மிஷினில் பணம் எடுக்க முதியவருக்கு உதவி செய்வது போல் பணத்தை திருடிய நபா் கைது செய்யப்பட்டார்.

திருவில்லிபுத்தூா் நகா் காவல் நிலைய சரகம், திருவில்லிபுத்தூா் தெற்கு தெருவில் உள்ள ஏடிஎம் மிஷினில், கடந்த 19.05.26 ம் தேதியன்று பணம் எடுக்க 70 வயது முதியவருக்கு உதவி செய்வது போல், அடையாளம் தெரியாத ஒரு நபா், அந்த முதியவருக்கு வேறு ஒரு பயனற்ற ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு, முதியவரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி, முதியவரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.3,75,000/-யை எடுத்தது சம்பந்தமாக கடந்த 29.05.26ம் தேதியன்று அந்த முதியவா் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடா்பாக திருவில்லிபுத்தூா் உட்கோட்ட குற்றப்பிரிவு காவல் ஆளிநா்கள் அந்த பகுதியிலிருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து கடந்த 30.05.26ம் தேதியன்று இச்சம்பவத்தில் ஈடுபட்ட சிவகாசியைச் சேர்ந்த முத்துசாமி மகன் மாரிமுத்து (41), என்பவரை, கைது செய்து அவரிடமிருந்து பணம் ரூ.90,000/-, புதிய தொலைக்காட்சி பெட்டி மற்றும் கைபேசி ஒன்று (மதிப்பு ரூ.32,500/-) ஆகியவற்றை கைப்பற்றி எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Related

“திண்டுக்கல்லில் காரிலிருந்து தவறி விழுந்த 50 பவுன் நகை - 150 க்கு மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து மீட்ட போலீசார்”