தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் அகில இந்திய அளவிலான ஹாக்கி திருவிழா கடந்த 21 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 16 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் லீக் போட்டிகள், கால் இறுதிப் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று அரை இறுதி போட்டிகள் நடைபெற்றன.
முதல் அரையிறுதி போட்டியில் மும்பை இந்தியன் நேவி அணியும் ஜலந்தர் ஆர்மி கிரீன் அணியும் மோதின.
இதில் 4:1 என்ற கோல் கணக்கில் மும்பை இந்தியன் நேவி அணி வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இரண்டாவது அரையிறுதி போட்டியில் பெங்களூரு சதர்ன் கமெண்ட் அணியும் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் இரயில்வே அணியும் மோதின.
இதில் 3:0 என்ற கோல் கணக்கில் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் இரயில்வே அணி வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
நாளை நடைபெறும் இறுதி போட்டியில் மும்பை இந்தியன் நேவி அணியும் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் இரயில்வே அணியும் மோதுகின்றன.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.