மேகதாது அணை விவகாரத்தில் அணை கட்டியே தீருவோம் எனக்கூறும் கர்நாடகா அரசை கண்டித்து ஒசூரிலிருந்து கர்நாடகா நோக்கி பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் பேரணி நடத்தினர்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கர்நாடகா மாநிலத்தில் மேகதாது அணை கட்டுவோம் எனக்கூறும் காங்கிரஸ் அரசை கண்டித்தும், அங்கு அணைக்கட்ட கூடாது என வலியுறுத்தியும்,
பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் நேற்று பேரணியை தொடங்கி, இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதிக்கு வந்தடைந்தனர்.

தர்கா பகுதியிலிருந்து தொடங்கிய விவசாயிகளின் பேரணி தமிழக - கர்நாடகா மாநில எல்லை ஜூஜூவாடி வழியாக கர்நாடகா மாநிலத்துக்குள் நுழைய தொடங்கினர்.
விவசாயிகளின் பேரணிக்காக மாவட்ட எஸ்பி தலைமையில் 300 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
250 விவசாயிகள் பங்கேற்றுள்ள நிலையில் தமிழக பகுதியிலேயே விவசாயிகளை தடுத்து நிறுத்தப்பட்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.