கோவில்பட்டி: தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆணைக்கிணங்கவும், ஊரக மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் அறிவுறுத்தலின்படியும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான பாலசுப்பிரமணியன் தலைமையில், பொதுமக்களின் நலன் கருதி கோடை வெப்பத்தைத் தணிக்கும் வகையில், கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தேவர் சிலை எதிரில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான எஸ். பாலசுப்பிரமணியன் தண்ணீர் பந்தலைத் திறந்து வைத்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இத்தண்ணீர் பந்தல் ஒரு மாத காலத்திற்கு (30 நாட்கள்) செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் தொடர்ந்து பயன்பெறும் வகையில் இந்நிகழ்வு ஒரு மாத காலத்திற்கு செயல்படுத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.