கோவில்பட்டி: வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் பூவனநாதசுவாமி  திருக்கோவிலுடன் இணைந்த சொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக் கோவிலில் ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக  அபிஷேகம்  மற்றும் பூஜைகள் நடைபெற்றது. 

பூஜைகளை திருக்கோயில் அர்ச்சகர் ஹரி பட்டர் செய்திருந்தார் அதனைத் தொடர்ந்து அறக்கட்டளையின் 56வது மாதம் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.. இந்நிகழ்ச்சிக்கு  மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பாஸ்கரன் தலைமை வகித்தார். கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, காவல்துறை கண்காணிப்பாளர் ஜெகநாதன் ஆகியோர் அன்னதானத்தை  துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு எம் கே எஸ் கேட்டரிங் உரிமையாளர் கருப்பசாமி வரவேற்றார். லட்சுமி டெக்கரேஷன் உரிமையாளரும் நகர மன்ற உறுப்பினரும் ஆகிய சண்முகவேல், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஆசிரியர் ஜீவானந்தம், கழுகுமலை மகாலட்சுமி ஆட்டோ கன்சல்டிங் வழக்கறிஞர் காளிராஜ், செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தொழிலதிபர்கள் அருண் பேக்கரி அண்ட் ஸ்வீட்ஸ் மாடசாமி, கோவில்பட்டி கடலை மிட்டாய் வியாபாரிகள் சங்கத் தலைவர் கார்த்தீஸ்வரன், கோவில்பட்டி பிள்ளையார் நத்தம் விஏஓ மந்திர சூடாமணி, நாகஜோதி மேட்ச் இண்டஸ்ட்ரீஸ் மேனேஜர் பாலமுருகன், மாலினி பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஏழாயிரம் பண்ணை பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். மற்றும் அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், தலைவர் ஜெயக்கொடி, பொருளாளர் கார்த்திகேயன், செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன், பாலமுருகன்  ,எஸ் கே அசோக், நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் ராஜா, எஸ் பி பாண்டியன், தமிழக ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் ஆசிரியர்கள் ராமமூர்த்தி, குமாரசாமி, அன்பழகன், ஜெயக்குமார், கழுகுமலை விக்னேஷ், மகேந்திரன் , அறக்கட்டளை  வழக்கறிஞர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.. அன்னதான ஏற்பாடுகளை கருப்பசாமி மணி பிள்ளை குடும்பத்தினர் செய்திருந்தனர்.. மாலைமலர் நிருபர் தங்கராஜ் நன்றி கூறினார். 

Related

“கணமூர் -ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கல்யாண உற்சவம்!”