திருவள்ளூர்: பிரசித்திபெற்ற சிறுவாபுரியில் 1500 ஆண்டுகள் பழமையான  ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் வெகுவிமர்சியாக நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம்  சிறுவாபுரியில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற ஸ்ரீஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் வெகுவிமர்சியாக நடைபெற்றது. தொண்டை நாட்டின் ராமாயண காலம் தொட்டு புகழ் பெற்ற சிறுவாபுரியில் கஜபிருஷ்டம்  என்ற அமைப்பில் திருகோயில் கொண்டு அருள்பாலித்து வரும் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோயில் மற்ற பரிவார மூர்த்திகள் மற்றும் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ராமாயணத்தில் ராமர் அஸ்வமேத யாகம் செய்த குதிரை இந்த பகுதிக்கு வந்த போது, ராமரின் புதல்வர்களான லவ, குசன் ஆகியோர் குதிரையை கட்டி வைத்து போர் புரிந்த இடமாக, அதாவது சிறுவர் போர் புரிந்த இடம் சிறுவாபுரியாகவும், சிறுவர்கள் அம்பு எய்தியதால் சிறுவரம்பேடு என்ற சொல் சின்னம்பேடு எனவும் மருவி அழைக்கப்படுகிறது. சுயம்புவாக உள்ள சிவலிங்கத்தை அகத்தியர் வழிபட்டதால் அகத்தீஸ்வரர் என பெயர் பெற்று வணங்கப்படுகிறது.

தாயார் ஆனந்தவல்லி மரகதத்தாலான சிலை உள்ளது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. யாக சாலையில் பூஜைகள் நடத்தப்பட்ட பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரை கொண்டு சென்ற சிவாச்சாரியார்கள் கோயிலை வலம் விமானங்களுக்கு  மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கூடி இருந்த பக்தர்கள் ஓம் நம சிவாய, ஒம் நம சிவாய என பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் மீது புண்ணிய நீர் தெளிக்கப்பட்டது.இணை செயலாளர் அனிதா கூடுதல் ஆணையர் சிவஞானம் மாவட்ட அறங்காவல் உறுப்பினர் லட்சுமி நாராயணன் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சிலம்பரசன், அருண், திமுக ஒன்றிய செயலாளர் ஆனந்தகுமார் சிஜே ரமேஷ் சிறுவாபுரி கிராம மக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related

“மே மாதத்தில் அலைமோதிய பக்தர்கள்: ஏழுமலையான் கோயிலில் 1.21 கோடி லட்டு விற்பனை”