தமிழ்நாடு லட்சிய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளராக நெல்லை ஜீவாவை நியமனம் செய்து லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவரும், மக்கள் தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் எம்.எல்.ஏ., அறிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரியில் ஆரம்பிக்கப்பட்ட லட்சிய ஜனநாயக கட்சி விஸ்வரூப வளர்ச்சி பெற்று கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் களம் கண்டது. புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனர் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மகத்தான வெற்றி பெற்றார். தமிழகத்திலும் லட்சிய ஜனநாயக கட்சியில் ஏராளமானோர் இணைந்து வருகின்றனர். நிர்வாகிகள் நியமனமும் நடைபெற்று வருகிறது.
தமிழக லட்சிய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளராக நெல்லை ஜீவா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கட்சியின் நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.
"தமிழகத்தில் லட்சிய ஜனநாயக கட்சியை (LJK) முழு வீச்சில் செயல்படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் முன்னெடுத்து செல்வதே எனது தலையாய கடமை" என தமிழக லட்சிய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா தெரிவித்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.