ஓஸ்லோ: நார்வே செஸ் போட்டியின் 8-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா, உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரும், முன்னாள் உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சனை (நார்வே) வீழ்த்தினார்.
நார்வேயின் ஓஸ்லோ நகரில் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற 8-வது சுற்று ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெள்ளை நிறக் காய்களுடனும், கார்ல்சன் கருப்பு நிறக் காய்களுடனும் விளையாடினர். இதில் சிறப்பாக காய்களை நகர்த்தி கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.
மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் அலிரேசா பிரோஸ்ஜா, இந்திய கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷைத் தோற்கடித்தார். பிறிதொரு ஆட்டத்தில் அமெரிக்க வீரர் வெஸ்லி சோ சக நாட்டு வீரரான வின்சென்ட் கீமரைத் தோற்கடித்தார்.
8-வது சுற்றின் முடிவில் வெஸ்லி சோ 14 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அலிரேசா 13 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பிரக்ஞானந்தா 12 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், வின்சென்ட் கீமர் 10 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், கார்ல்சன் 9 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், குகேஷ் 8 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.