தேனி அருகே ஆபள்ளி நிர்வாகம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் பள்ளி செயல்படாமல் மாணவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் காவல்துறை குவிக்கப்பட்டு, கல்வி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

தேனி மாவட்டம், தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பகுதியில் பெனடிக் பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பெனடிக் பள்ளி நிர்வாகத்திற்கும் சி இ ஓ ஏ என்ற கல்வியின் நிர்வாகத்திற்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டு பள்ளியை சி இ ஓ ஏ நிறுவனம் நடத்திக் கொள்ளலாம் என ஒப்பந்தம் போடப்பட்டு பள்ளி செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் பெனடிக் நிர்வாகத்திற்கும் சி இ ஓ ஏ நிர்வாகத்திற்கும் ஒப்பந்தம் தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில் இரண்டு தரப்பினரும் மாறி மாறி நீதிமன்றம் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் வழக்கு பதிவு செய்தும் வழக்கு விசாரணை நடந்து வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்  இன்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில் பள்ளியில்  ஒரு பகுதி முழுமையாக தகுதி சான்றிதழ் பெறவில்லை என்றும்  மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்றும் வகுப்பு நடத்தக்கூடாது என்றும் பள்ளிக்கு மாணவர்கள் செல்ல தடை விதிக்க வேண்டுமென பெனடிக் நிர்வாகம் கல்வித்துறை அதிகாரிகளிடம்  மனு அளித்தது.

இதனையடுத்து பள்ளி நிர்வாகம் பள்ளியின் ஒரு பகுதியில் மாணவர்கள் சேர்க்கை நடத்தவும் வகுப்புகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வழக்கம் போல பள்ளி மாணவர்கள் பள்ளியின் ஒரு பகுதிக்கு சென்ற நிலையில் அங்கு காவல்துறையினர் அவர்கள் செல்ல அனுமதி மறுத்தனர். மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டுமென சிஇஓ ஏ நிர்வாகம் காவல்துறையினரிடம் கேட்டுக் கொண்ட நிலையில் காவல்துறையினர் கல்வி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

பின்னர் கல்வி துறை  அதிகாரிகள் மற்றும் வருவாய்  துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பள்ளிக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களை அருகில் உள்ள பள்ளிக்கு சிஇஓ எ பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

இரு நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Related

“திண்டுக்கல்லில் அண்ணாமலை பிறந்தநாள் கொண்டாடிய அன்புக்கூடம் சமூக அமைப்பு! ”