திண்டுக்கல்: அண்ணாமலை ஐபிஎஸ் பிறந்தநாளை முன்னிட்டு நாகல் நகர் பாரதிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் அண்ணாமலை அன்பு கூட்டம் சமூக சேவை அமைப்பு சார்பாக 500க்கும் மேற்பட்டோருக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள அண்ணாமலை அன்பு கூட்டம் சமூக சேவை அமைப்பு சார்பாக திண்டுக்கல் நாகல் நகர் பாரதிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் சி. கே. பாலாஜி தலைமையில், மாவட்ட தலைவர் விஷ்ணுதர்ஷன் ஆகியோர் ஏழை எளிய மக்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு மாபெரும் அன்னதானம் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.