சென்னை: தமிழகத்​தில் கோடை விடு​முறை முடிந்து அனைத்து வித​மான பள்​ளி​களும் இன்று (ஜூன் 4) முதல் திறக்கப்பட்டன. தமிழகத்​தில் இந்​தாண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கடந்த ஏப்​ரல் 23-ம் தேதி நடத்​தப்​பட்​டது.

இதன் காரண​மாக பள்ளி மாணவர்​களுக்​கான தேர்​வு​கள் வழக்​கத்​தை​விட முன்​கூட்​டியே நடத்தி முடிக்​கப்​பட்​டன. அதன்​படி பள்​ளிக்​கல்வி பாடத்​திட்​டத்​தில் 10, 11, 12-ம் வகுப்​பு​களுக்கு மார்ச் 2 முதல் ஏப்​ரல் 6-ம் தேதி வரை​யும், 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களுக்கு ஏப்​ரல் 1 முதல் 16-ம் தேதி வரை​யும் தேர்​வு​கள் நடத்​தப்​பட்​டன.

 

தொடர்ந்து பள்ளி மாணவர்​களுக்கு ஏப்​ரல் 17-ம் தேதி முதல் கோடை விடு​முறை விடப்​பட்​டது. இந்த நாட்​களில் தமிழக அரசு சார்​பில் மாணவர்​கள் நலன் சார்ந்த சிறப்பு முகாம்​களும் நடத்​தப்​பட்​டன.

அதன்​படி கோடை விடு​முறை முடிந்து பள்​ளி​கள் இன்று (ஜூன் 4) முதல் திறக்கப்பட்டன. இதற்​கான வளாகப் பராமரிப்பு உள்​ளிட்ட பல்​வேறு முன்​னேற்​பாடு​கள் பள்​ளி​கள் தரப்​பில் முடிக்​கப்​பட்டு தயார் நிலை​யில் உள்​ளன.

 

இதுத​விர பள்​ளி​கள் திறக்​கும் முதல் நாளி​லேயே அரசு, அரசு உதவி பெறும் பள்​ளி​களில் பயிலும் மாணவர்​களுக்கு விலை​யில்லா பாடநூல்​கள், நோட்​டுப் புத்​தகங்​கள் போன்​றவற்றை விநி​யோகம் செய்​வதற்​கான பணி​களும் முடுக்​கி​விடப்​பட்​டுள்​ளன.

இதுத​விர புதிய இலவச பேருந்து பயண அட்​டைகள் வழங்​கப்​படும் வரை ஏற்​கெனவே உள்ள பழைய அட்​டையைக் கொண்டு மாணவர்​கள் பயணிக்​கலாம் என்று போக்​கு​வரத்​துத் துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது.

இதற்​கிடையே பள்ளி வேலை நாட்​கள், தேர்​வு​கள், விடு​முறை, ஆசிரியர் பயிற்​சி, அட்​ட​வணை உயர்​கல்வி வழி​காட்டி முகாம் உள்​ளிட்ட பல்​வேறு விவரங்​கள் அடங்​கிய கல்​வி​யாண்டு நாட்​காட்டி 2018-ம் ஆண்​டு​முதல் ஆண்​டு​தோறும் பள்​ளிக்​கல்​வித் துறை​யால் வெளி​யிடப்​பட்டு வரு​கிறது. அதன்​படி வரும் கல்​வி​யாண்​டுக்​கான (2026-27) நாட்​காட்​டி​யானது எப்​போது வெளி​யாகும் என்ற எதிர்​பார்ப்​பு​கள் எழுந்​துள்​ளன.