மத்திய, மாநில அரசு உயர் பணிகளில் சேர விரும்பும் கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பயன்பெறும் வகையில், கோவையில் ‘அறிவுச்சுடர் ஐ.ஏ.எஸ் அகாடமி’ துவங்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழாவில் டெல்லியைச் சேர்ந்த சிவில் சர்வீசஸ் பயிற்றுநர் சல்மான் கான் மற்றும் அவரது மாணவரான UPSC தேர்வில் சாதனை படைத்த கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஏ. அப்துல்லாஹ் அஃப்ரித் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வழிகாட்டுதல்களை வழங்கினர்.
இதுகுறித்து பயிற்றுநர் சல்மான் கான் மற்றும் UPSC தேர்வில் சாதித்த மாற்றுத்திறனாளி இளைஞர் அப்துல்லாஹ் அஃப்ரித்
கூறியதாவது: UPSC, TNPSC போன்ற போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்குப் பெரிய கல்லூரியில் படிக்க வேண்டும் அல்லது லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை எனத் தெரிவித்தார்.
நடப்பு நிகழ்வுகளை மனப்பாடம் செய்வதற்குப் பதிலாக, அவற்றின் பின்னணியையும் பாடப்புத்தகங்களுடனான தொடர்பையும் புரிந்துகொண்டு படிப்பது வெற்றிக்கு உதவும் என்றும் கூறினார். மேலும், சரியான பாடத்திட்டத்தைத் தேர்ந்தெடுத்து, திட்டமிட்டுப் படிப்பதுடன் முறையான வழிகாட்டுதலைப் பெறுவது முக்கியம் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
கிராமப்புற மாணவர்களுக்கு ஆறு மாதங்கள் இலவசப் பயிற்சி அறிவிச்சுடர் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு இலவசப் பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கலந்தாய்வு, தேர்வு குறித்த வழிகாட்டுதல், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளைக் கொண்டு கருத்தரங்குகள், மாதிரித் தேர்வுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆறு மாதங்களுக்குப் பிறகு ஜெராக்ஸ், மின்சாரம் மற்றும் புத்தகங்கள் உள்ளிட்ட பராமரிப்புச் செலவுகளுக்காகக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற குடிமைப் பணிகளுக்குத் தயாராக விரும்பும் மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தாலே UPSC தேர்வுக்கான கல்வித் தகுதியைப் பூர்த்தி செய்ய முடியும் என்றும் சல்மான் கான் விளக்கினார்.
எனவே, பொருளாதாரச் சிரமங்களைக் காரணமாகக் கொண்டு மாணவர்கள் தங்களது அரசு உயர் பணிக் கனவுகளைக் கைவிடாமல், சரியான வழிகாட்டுதலுடன் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அறிவுச்சுடர் ஐ.ஏ.எஸ் அகாடமி கோவை வெரைட்டியால் சாலை அடுத்துள்ள ஐந்து மூக்கு.என்.ஹச்.ரோடு பகுதியில் அமைந்துள்ளது - மேலும் கூடுதல் தகவலுக்கு "72001-16111" என்கின்ற என்னை தொடர்பு கொள்ளலாம் என அகாடமி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.