அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை சார்பில் வணிக சந்தை கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை கல்லூரி முதல்வர் தமிழரசி தொடங்கி வைத்தார்.
வணிகவியல் கணினி பயன்பாட்டு துறைத் தலைவர் சுகவனேஸ்வரி, மற்றும் கல்லூரியின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களை உற்பத்தி திறனை பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தனர்.
இந்த கண்காட்சியில் வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை மாணவர்கள் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தி, விற்பனை, விலை நிர்ணயம், விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற வணிகச் செயல்பாடுகளை நடைமுறைப் படுத்தியிருந்தனர்.
குறிப்பாக சாலையோரக் கடைகள் முதல் மிகப்பெரிய வணிக வளாகங்கள் வரை கிடைக்கும் அனைத்து வகையான உணவு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன குறிப்பாக அனைவரும் விரும்பி உண்ணும் கடலை மிட்டாய், எள்ளுருண்டை,
தட்டு வடை, செட்டு பழ வகைகளில் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் பாரம்பரிய உணவு வகைகளை காட்சிப்படுத்தி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் மாணவர்கள் படைப்பில் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு உணவுப் பொருட்களையும் ருசித்து அதன் சுவையை உணர்ந்து பாராட்டு தெரிவித்தனர்.
படிக்கும் காலத்தில் வியாபாரத்தை எந்த வகையில் மேற்கொள்வது என்பதை உணர்த்தும் வகையில் இந்த கண்காட்சி மாணவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது.
இக்கண்காட்சியினை கல்லூரியில் பயிலும் பல்வேறு துறைச் சார்ந்த மாணவ மாணவிகள் பார்த்து பயன் அடைந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பட்டினை வணிகவியல் துறை பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.