சேலம் மாநகர் குடிநீர் வினியோகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் மாமன்ற கூட்டத்தில் சேலம் மாநகர் குடிநீர் விநியோகத்தை தனியார் மையமாக்கும் நடவடிக்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அரசுக்கு அனுப்பாமல், மாநகராட்சி ஆணையர் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றம்சாட்டி மேயர் ராமச்சந்திரன் தலைமையில் திமுக விசிக மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும், சேலம், நாமக்கல், தர்மபுரி, கரூர் உள்ளிட்ட 5 மாநில குப்பைகளை கொண்டு எரி சக்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு மாநகராட்சிக்கு சொந்தமான 1000 கோடி மதிப்பிலான நிலத்தை 0 மதிப்பீடு என்று கூறி குப்பை எரி சக்தி தயாரிக்கும் நிறுவனத்திடம் இலவசமாக ஒப்படைக்கும் தமிழக அரசின் முடிவை கைவிட வேண்டும் என்றும், கடந்த மாதம் மாமன்ற கூட்டத்தை நடத்த விடாமல் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி  கொண்டு அராஜகத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் துணை மேயர் சாரதாதேவி மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றும் வலியுறுத்தினர். 

முன்னதாக மாநகர மேயர் உள்ளிட்டவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபாடுவதாக அறிவிக்கபட்டத்தை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதோடு, மாநகர மேயர் அலுவலகத்தில் மேயர் செய்தியாளர் சந்திப்பு நடத்த காவல்துறை அனுமதி மறுக்கபட்டதால் இரு தரப்பினரிடையே சற்று வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related

“ இரட்டை இலை – விசில் சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்திடம் இன்பதுரை, எம்.பி. புகார்!”