புதுக்கோட்டை மாவட்டம், கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில், இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மேரா யுவா பாரத், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆயுஷ் மையம் மற்றும் திருச்சி  ஸ்மார்ட்டா அகாடமி இணைந்து நடத்திய இளைஞர்களுக்கான சித்த முத்திரை பயிற்சி சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.

டாக்டர் சாலை ஜெயகல்பனா சித்த முத்திரை உலகலாவிய ஆராய்ச்சி மையம் அமைப்பை நிறுவி, அதன் மூலம் சித்த முத்திரை கலையை 35 ற்கும் மேற்ப்பட்ட நாடுகளில் பல்லாயிரக்கணக்கான இளைஞர் மற்றும் பொது மக்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். சித்தமுத்திரை வாயிலாக நலம் சார்ந்த பயிற்சியை வழங்கி வருவதை பாராட்டி மத்திய அரசின் மை பாரத் துறை சார்பாக சிறப்பு விருதினை அதன் மாவட்ட அலுவலகர் ஜோயல் பிராபாகர் வழங்கினார். விருதினைப் பெற்றுக்கொண்ட சாலை ஜெய கல்பனா இளைஞர்களுக்கான சித்த முத்திரை பயிற்சியை வழங்கினார்.

இந்த சித்த முத்திரை கலை எல்லா விதமான இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு மனம் மற்றும் உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கு மிக அவசியமான ஒன்று. மேலும் நம்முடைய ஐந்து விரல்களாலே ஆரோக்கியத்தை சரி செய்து கொள்வது மிகவும் சிறப்பானது என்று பயிற்சியின் பின்பு ஜோயல் பிராபாகர் கூறினார். இந்நிகழ்வில் சித்தர்வனம் சர்வதேச சித்த மருத்துவமனை நிறுவனர், பிரபல சித்த முத்திரை விஞ்ஞானி டாக்டர் சாலை ஜெயகல்பனா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, இளைஞர்களுக்குச் சித்த முத்திரை பயிற்சி அளித்தார். 

அப்போது ஐம்பூதங்களுக்கும் ஐந்து விரல்களுக்கும் உள்ள தொடர்பு மனித அன்றாட வாழ்க்கையில் சித்தமுத்திரைப் பயிற்சிகளை மேற்கொள்வதன் முக்கியத்துவம் மற்றும் அவை எவ்வாறு உடல் மன ஆரோக்கியத்தைப் பேண உதவுகின்றன என்பதையும் விரிவாக எடுத்துரைத்தார்.

சித்த முத்திரை விஞ்ஞானி டாக்டர் சாலை ஜெய கல்பனா.

இந்திய அரசின் ஆயுஷ் மற்றும் டி.எஸ்.ஐ தலைவர் சேவக் விஜய் மற்றும் தமிழ்நாடு மாநில மேரா யுவா பாரத் இயக்குநர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி முதல்வர் மீனாட்சி வரவேற்புரை யாற்றினார். புதுக்கோட்டை மாவட்ட இளைஞர் அலுவலர் ஜோயல் பிரபாகர் முன்னிலை வகித்தார். மேரா யுவா பாரத் திட்ட மேற்பார்வையாளர் நமச்சிவாயம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.

மேலும் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆயுஷ் மைய துறைத் தலைவர் சிவகுமார் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் ராஜா பாபு ஆகியோர் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி சிறப்பித்தனர். நிறைவாக, மேரா யுவா பாரத் மாவட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் சரவண குமார் நன்றி கூறினார்.

 

Related

“முன்னாள் முதல்வர் காமராஜர் காலை உணவுத் திட்டம் தொடக்க நிகழ்ச்சி: விருதுநகர் ஆட்சியர் ஆய்வு! ”