சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் திருநங்கைகளுக்கு  நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாலிவுட் நடிகை தியா மிர்சா  கலந்து கொண்டார்.

சமூக செயற்பாட்டாளர் அப்சரா ரெட்டியின் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் குட் டீட் க்ளப் (Good deed club) மற்றும் குருநானக் கல்லூரி இணைந்து பத்தாயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, மற்றும் நலிவடைந்த திருநங்கைகளுக்கு  தள்ளுவண்டி உணவகம் வழங்கும் நிகழ்ச்சி குருநாநக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் அமைப்பின் இந்தியாவுக்கான நல்லெண்ணத் தூதரும் பாலிவுட் நடிகையுமான தியா மிர்சா கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். 

அவருடன் சமூக செயற்பாட்டாளர் அப்சரா ரெட்டி, சம்யுக்தா சிவந்தி ஆதித்தன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சபீதா ஐ.ஆர்.எஸ் அதிகாரி
நந்தகுமார், மற்றும் பெண் தொழில் அதிபர்கள் சமூக செயற்பாட்டாளர்கள்,  கலந்து கொண்டனர். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10,000 மரங்கள் நடும் திட்டத்தின் முதல் கட்டாமாக 15 மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டது.

நிகழ்வின் ஒரு பகுதியாக, திருநங்கைப் பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொள்ள உதவும் ‘டிக்னிட்டி” வண்டிகள் எனப்படும் தள்ளுவண்டி உணவகம் வழங்கப்பட்டன. பாலிவுட் நடிகை தியா மிர்சாவுடன் இணைந்து சம்யுக்தா சிவந்தி ஆதித்தன்  தள்ளுவண்டி கடைகளை திறந்து வைத்து திருநங்கைகளுக்கு வழங்கினார் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் மனிதர்களின் கண்ணியமான வாழ்வையும் இணைக்கும் முயற்சியாக இந்த நிகழ்வு அமைந்தது. அன்று மாலை நடைபெற்ற குட் டீட்ஸ் கிளப் நிகழ்வில் சுமார் 600 பெண்கள் மத்தியில் தியா மிர்சா உரையாற்றினார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் ஒவ்வொருவருக்கும் உள்ள பொறுப்பையும், அன்றாட வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளக்கூடிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். 

மரக்கன்றுகள் நடும் திட்டம் மற்றும் திருநங்கைப் பெண்களுக்கான வாழ்வாதார உதவி ஆகியவற்றின் மூலம், சமூகத்தில் நீடித்த மாற்றத்தை உருவாக்குவதே அப்சரா அறக்கட்டளை மற்றும் குட் டீட்ஸ் கிளப்பின் நோக்கம் என்று அப்சரா ரெட்டி தெரிவித்தார்.

Related

“ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு : மார்க்சிஸ்ட் கம்யூ. புகார்”