மேகதாது விவகாரத்தில் உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

மேகதாது அணை அமைய உள்ள இடத்தை மத்திய அரசின் நிபுணர் குழு நேரில் பார்த்து ஆய்வு செய்துள்ளதாக கர்நாடகா முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ள நிலையில் அதற்கு கண்டனம் தெரிவித்து இபிஎஸ், தமிழக முதல்வருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவில், கர்நாடக முதல்வரை பார்த்து பயமா..?  தனக்கு தானே பட்டம் சூட்டி கொண்ட தாய்மாமா என்ன செய்யப் போகிறார்?

மேகதாது அணை அமைய உள்ள இடத்தை மத்திய அரசின் நிபுணர் குழு நேரில் பார்த்து ஆய்வு செய்துள்ளதாக கர்நாடகா முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. இதுகுறித்து இன்னமும் தமிழக அரசு சார்பில் எந்த செய்தியும் வரவில்லை.

கர்நாடகத்துடன் தமிழக அரசு கூட்டு சேர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் செயலுக்குத் துணை போகிறதா என்ற கேள்வி மக்களிடத்தில் எழுகிறது. மேகதாது அணை கட்டுமான அனுமதி கேட்டு கர்நாடக முதலமைச்சர் @DKShivakumar, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் திரு. @CRPaatil அவர்களை சந்தித்துப் பேசியிருப்பதும் சந்தேகத்தை உண்டாக்குகிறது. 

தமிழகம் புதுச்சேரி ஒப்புதல் இல்லாமல் புதிய அணையோ, நீர் தேக்கமோ கட்ட இயலாது என்ற அரசியல் அமைப்புச் சட்டத்தை முதல்வர் அறிவாரா?. தண்ணீர் திறப்புக்கும் வாய் திறக்கவில்லை. அணை கட்ட தடுப்பதற்கு வாய் திறக்கவில்லை. 

கர்நாடக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழக அரசுக்கும் ரீல் முதல்வருக்கும் கடுமையான கண்டனம். உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் கடுமையான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார். 

Related

“திருச்சி மத்திய மண்டலத்தில் சட்ட ஒழுங்கு மற்றும் குற்ற நிகழ்வுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்”