தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் பிரசித்தி பெற்ற வெங்கடாசலபதி கோயில் அமைந்துள்ளது. தென்னகத்து திருப்பதி என அழைக்கப்படும் இக்கோயிலுக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமான வந்து செல்கின்றனர்.குறிப்பாக புரட்சி மாதம் என்பதால் வெளியூர் பக்தர்கள் தான் அதிகம் வாகனங்களில் வருகிறார்கள்.
கோயிலுக்கு மேலே செல்லும் மலைப்பாதையில் பல இடங்களில் சாலை சேதமடைந்து, குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் இந்த சாலை மோசமடைந்து கோவிலுக்கு பக்தர்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும்.,

மேலும் இருசக்கர வாகனங்கள் மற்றும் வேன்,கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும் பக்தர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இரு சாகர வாகனங்கள் வரும் நிலை தட்டுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள்.
சாலை சீரமைப்பு தொடர்பாக ஏற்கனவே பலமுறை இந்த பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கைகள் விடுத்தும் இதுவரை நிரந்தர தீர்வு ஏற்படவில்லை என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், சேதமடைந்த மலைப்பாதையை முழுமையாக சீரமைத்து பாதுகாப்பான போக்குவரத்துக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் தினம் புரட்டாசி மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் இந்த பெருமாள் கோவிலுக்கு இன்று காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர். அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.