கிருஷ்ணகிரி மாவட்டம்  வே. மாதேப்பள்ளி கிராமத்தில் விவசாயிகள் சங்கம் மற்றும் அம்பேத்கார்  வளர்க்கல்வி சார்பில் நடைப்பெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இருளர் பழங்குடி இனமக்கள் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்  வழங்கும் விழா நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே உள்ள  வே.மாதேப்பள்ளி கிராமத்தில்  தொழிலாளர் நல வாரிய சங்கம்  விவசாயிகள் சங்கம் மற்றும் அம்பேத்தர் வளர்கல்வி அறக்கட்டளை சார்பில்  இருளர் பழங்குடி இனமக்கள் 1000 பேருக்கு நலதிட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் தி.க.கிருஷ்ணன் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவிற்கு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர்  ஜெயராமன், ரகமதுல்லா,  மஹபூப் அலி, சின்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பின்னர் நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய கிருஷ்ணன், மூன்று சங்கங்களின் சார்பில் ஆண்டு தோறும் ஏழை எளிய மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.  கடந்த ஆண்டை பேலவே இந்த ஆண்டும் ஏழை எளிய மக்களுக்கு  கூடுதலாக நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்னும் மலை சார்ந்த குகை போன்ற பகுதிகளில் எந்த ஒரு அடிப்படை வசதிகள் இன்றி இன்றும் வசித்து வரும் இருளம் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திட குடியிக்க வீடு, பழுதான வீடுகளை இடித்து விட்டு புதியதாக தொகுப்பு வீடுகள் சாலை வசதி, இலவச வீட்டு மலைப் பட்டாக்களும் வழங்கிட அரசு கவனத்திற்கு கொண்டு சென்று குறைகள் நிவர்த்தி செய்ய சங்கம் ஏற்பாடு செய்யும்,அனைத்து மக்களும் தொழிலாளர்,விவசாய சங்கங்களில் இணைந்து செயல்படமுன் வரவேண்டும். வறுமை இல்லா கிராமங்களை உருவாக்க வேண்டும் என கிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். மேலும் இத்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக  ஒய்வு பெற்ற காவல் துணை கண்காணிப்பாளர் பொன்.ஜெயராமன், பாலகிருஷ்ணன் ஆகியோர் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் மட்டுமின்றி இருளர் பழங்குடி மக்கள் உள்ளிட்ட 1000 பேருக்கு புடவைகள், போர்வைகள், வேஸ்டிகள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், டிபன் பாத்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சங்கத்தின் நிர்வாகிகள் ரெஜினா, சண்முகம், குழந்தை, ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Related

“அகில இந்திய காமராஜா் ஆதித்தனார் கழகத் தலைவருடன் சந்திப்பு!”