ஏமன் நாட்டை நோக்கிச் சென்ற அகதிகள் படகு ஜிபூட்டி கடற்கரை அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 குழந்தைகள் உட்பட 109 பேர் உயிரிழந்தனர். மேலும் காணாமல் போன 116 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அனைத்து சர்வதேச அகதிகள் அமைப்பான ஐஓஎம் தெரிவித்துள்ளது.
சுமார் 350 பேருடன் சென்ற அந்தப் படகு அக்டோபர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிபூட்டி நாட்டின் துறைமுக நகரான ஒபோக்கிற்கு வடக்கே உள்ள குஹெரே பகுதிக்கு அருகில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 80 பேருக்கும் அதிகமானோர் உயிர் பிழைத்துள்ளனர். உயிர் பிழைத்த அனைவரும் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள். விபத்துக்கான காரணங்கள் உடனடியாகத் தெரியவில்லை. எத்தியோப்பிய அரசுத் தரப்பிலிருந்தும் தகவல் வெளியிடப்படவில்லை.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.