உலகப் புகழ்பெற்ற பிடிஎஸ் இசைக்குழு கிராமி விருதுகளைப் புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ளனர்.
தென்கொரியாவை மையமாக வைத்து உலகம் முழுவதும் தங்கள் பாடல்களால் இசைப் பிரியர்களை வருபவர்கள் பிடிஎஸ் இசைக்குழுவினர். மொழி புரியவில்லை என்றாலும் இந்தியா உள்பட பல நாடுகளில் மிகப்பெரிய செல்வாக்கும் புகழும் கொண்டவர்களாகத் திகழும் பிடிஎஸ் குழுவினர் இந்தாண்டு கிராமி விருதுக்கான பரிந்துரையிலிருந்து தங்கள் குழுவை விலக்கிக் கொண்டனர்.
காரணம், கிராமி விருதுக் குழு இந்தாண்டு முதல் ஆசிய நாடுகளுக்கான சிறப்பு பிரிவை உருவாக்கியுள்ளனர். பிடிஎஸ் இசைக்குழு ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்தப் பிரிவில்தான் இடம் பிடிப்பார்கள்.
இந்த நிலையில், இசைக்கு எந்த குறிப்பிட்ட அடையாளங்களும் இல்லை; அதனைக் குறுக்கி மதிப்பிடக் கூடாது என்பதால் இந்த முறை கிராமி விருதைப் புறக்கணிக்கிறோம் என பிடிஎஸ் அறிவித்துள்ளது. உலகின் முன்னணி இசைக்குழு இசைத்துறைக்கென வழங்கப்படும் முதன்மையான விருதைப் புறக்கணித்திருப்பது விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.