சென்னை: தவெக தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றார்.
தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளின் வெற்றி பெற்றது. பதவி ஏற்க 118 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற அடிப்படையில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றி கழகம் தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சர் ஆக பதவியேற்றுள்ளார்.
அவருக்கு தமிழக ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் ஒன்பது அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்டனர்.
அமைச்சர்களாக என்.ஆனந்த், ஆதவ் அர்ச்சுனா, அருண்ராஜ், கே.ஏ. செங்கோட்டையன், வெங்கட் ரமணன், நிர்மல்குமார், ராஜமோகன், பிரபு, கீர்த்தனா ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
ரகசியகாப்பு்பிரமாணமும் முதலமைச்சர், அமைச்சர்கள் எடுத்துக் கொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.