திருவள்ளூர்: திருவள்ளுர் வடக்கு மாவட்டம் சார்பில் அதிமுகவுக்காக உயிர்த் தியாகம் செய்த தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் பூக்கடை கே.ஏ.எஸ். மகேந்திரன் திருவுருவப்படத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்எல்ஏ சிறுணியம் பலராமன் மலர் துவி அஞ்சலி செலுத்தினார்.
அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வர், புரட்சித்தமிழர் எடப்பாடி. கே பழனிசாமி ஆணைக்கிணங்க கழகத்திற்காக உயிர்த் தியாகம் செய்த தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் பூக்கடை கே.ஏ.எஸ். மகேந்திரன் அவர்களுக்கு, அஇஅதிமுக திருவள்ளுர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் பொன்னேரி அண்ணா சிலை அருகே அவரது திருவுருவப்படத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் கழக நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் ராஜா ஒன்றிய செயலாளர்கள் ஜி.எஸ். வினோத், எம். முத்துக்குமார், சம்பத் , சுந்தரவதனம், கே எம் எஸ் சிவக்குமார், எஸ் எம் ஸ்ரீதர், ரமேஷ் குமார், பொன்னேரி நகர செயலாளர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.