தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மிக்கேல் அதிதூதர் ஆலய பங்குத்தந்தை வின்சென்ட்டை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் ஆயர் இல்லத்தை முற்றுகையிட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி அருகே உள்ளது தருவைகுளம் மீனவ கிராமம். இந்த கிராமத்தில் மிக்கேல் அதிதூதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் பங்குத்தந்தையாக வின்சென்ட் கடந்த ஐந்து ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இந்த கிராமத்தில் புதிதாக புனிதர் நிக்கோலஸ் ஆலயம் புதிதாக கட்டப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. இந்த ஆலயத்தில் விரைவில் பணிகள் நிறைவடைய உள்ளது.

இந்த நிலையில் பங்கு தந்தையை உடனடியாக மாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் ஆயர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த பங்கு மக்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் எந்தவித உடன்பாடும் ஏற்படாததை தொடர்ந்து தருவைக்குளம் மீனவ கிராம மக்கள் ஆயர் இல்லத்தில் இருந்து கிளம்பி சென்றனர்.

Related

“பள்ளிகளில் காலியாக உள்ள 1800 தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும்: அன்புமணி ராமதாஸ்”