தமிழ்நாடு தர்ஹாக்கள் பேரியக்கம் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெறுகிறது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் ஆலம் டவரில், காலை 11 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சிக்கு தலைமை மாநில ஆலோசகர் அஷ்ரப் அலி ஹாஜியார் தலைமை வகிக்கிறார். தமிழ்நாடு தர்ஹாக்கள் பேரியக்கம் மாநில தலைவர் M. ஆசாத் காதிரி, மாநிலச் செயலாளர் I. உம்மர் பாஷா, மாநிலத் துணைத் தலைவர் B.T. பாவா சாஹிப்,மாநில கவுரவ தலைவர் G.M. ஹசன் குத்துஸ் சாஹிப் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். 

நிகழ்ச்சி தொகுப்பாளரான மாநில முதன்மைச் செயலாளர் B. முஹம்மது அபுதாஹிர் காதிரி, நிகழ்ச்சி அமைப்பாளர் சஜ்ஜாத்து ஹசைன் காதிரி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மாநில கொள்கை பரப்பு செயலாளர் மக்சூத் சாஹிப் கிராத் மற்றும், மாநில சரியத் சட்ட ஆலோசகர் அல்தாப் உசேன் சாஹிப் சிறப்பு துவாவுடன் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருச்சி மாவட்ட தலைவர் ரஷிது கலந்தர் சாஹிப் வரவேற்புரை ஆற்றுகிறார். திருச்சி மாவட்ட செயலாளர் ஷமி அகமது சாஹிப் நன்றி உரையாற்ற இருக்கிறார். 

அனைத்து மாநில மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர்களாக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு தர்ஹாக்கள் பேரியக்கம் செயல்பாடுகள் மற்றும் முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. ஏற்பாடுகளை திருச்சி மாவட்டம் தமிழ்நாடு தர்ஹாக்கள் பேரியக்கம் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 

Related

“தமிழ்நாடு செல்போன் சங்கம் சார்பில் பொன்னேரியில் ரத்ததான முகாம்!”