திருச்சி: திருச்சி எஸ் ஆர் எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அறிவியல் மற்றும் மானுடவியல் புலம் சார்பாக 2026 - 27ம் கல்வி ஆண்டின் முதுகலை கணினி அறிவியல் துறை, இளங்கலை பொருளாதாரம் மேலாண்மையில் ஆகியவற்றின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா மருத்துவர் ஆர். சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிண்ரில் நிறுவனத்தின் தலைமை இயக்குனர் முனைவர் ராஜ். சி.மோகன் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் சார்பு துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் எம். டி. சமீருதீன் கான், எஸ் ஆர் எம் அறிவியல் மற்றும் மானுடவியல் புல முதன்மையர் முனைவர் டி. பிரான்சிஸ் சேவியர் கிறிஸ்டோபர், செயற்கை பிரிவு இயக்குனர் முனைவர் கே கதிரவன், கல்வி சார் மேம்பாட்டு பிரிவு இயக்குனர் பேராசிரியர் முனைவர் ஜி வைரவேல், மற்றும் எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் பல்வேறு பிரிவு புல முதன்மைர்கள் முதல்வர்கள் துணை முதல்வர்கள் துணைத் தலைவர்கள் பேராசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என 1500 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.