தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழு மாநிலத் தலைவர் கு. தியாகராஜன் வழிகாட்டுதலின்படி திருச்சி மாவட்டம் டோல்கேட் அருகே உள்ள காஜமியான் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் திருமாவளவன் வரவேற்றார். மாவட்ட தலைமை நிலையச் செயலாளர் சுப்ரமணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விஜயகுமார், மணிகண்டன்,மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் அன்புச் செழியன், பூபாலன், மாவட்டத் துணைத் தலைவர்கள் தண்டபாணி, சுகுமார், கிருஷ்ண மூர்த்தி அழகர்சாமி, பாலகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் மணிகண்டன், இளம்பரிதி, ஈஸ்வரன், பெருமாள், மாவட்ட மகளீரணிச் செயலாளர் பிரபா, மாவட்ட மகளீரணித் துணைச் செயலாளர்கள் அருட்செல்வி, கவிதா, செந்தில்வடிவு, கீதா ராணி, மீரா தேவி, மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர்கள் அர்ச்சுனா, ஜீனத்துன்னிஷா, மாவட்ட மகளிரணித் துணை ஒருங்கிணைப்பாளர்கள் மாலினி, சூர்யா மேரி,அன்னகாமாட்சி உள்ளிடோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் மாநில சட்ட ஆலோசகர் நேதாஜி, மாவட்ட செயலாளர் உதுமான் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலத் துணைத் தலைவர் இராஜங்கம், மாநில ஒருங்கிணைப்பாளர் முருகன், மாநில செய்தித்தொடர்பாளர் ரகமதுல்லா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
மாவட்ட செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விபரம்: கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்ட தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) முழுமையாக அமல்படுத்திட வழிகாட்டுதல்களை வெளியிட்டு, 1.1.2026க்கு பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பலன்களான பணிக்கொடை, கமியூட்டேசன் ஆகியவற்றை வழங்கிட வேண்டும்.
1.1.2026க்கு முன்னர் பங்களிப்பு ஓய்வு திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று, ஓய்வூதியம் இன்றி தவித்து வருபவர்களுக்கு அரசாணை எண்.7 நிதித்துறை நாள் 9.1.2026ல் குறிப்பிட்டுள்ளபடி, பணிக்கால அளவிற்கு ஏற்ப சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும் என்று உள்ளதை உடனடியாக அமுல்படுத்திட வேண்டும். த.வெ.க தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்புக்கு முன்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு விலக்கு அளிக்க தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதை வரவேற்கிறோம். அதேவேளை மாண்புமிகு பாரதப் பிரதமரை அவர்களை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் மேற்கொண்டு தகுதி தேர்வு நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தர வேண்டும். சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு பணிக்காலத்திற்கு ஏற்ப சிறப்பு மதிப்பெண் வழங்கிட வேண்டும். முதுகலை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கி ஊதிய முரண்பாட்டை களைந்திட வேண்டும்
1999 இல் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 6000க்கும் மேற்பட்டவர்களுக்கு (2800 level 10) சென்ற ஆண்டே கடைசி நிலைக்கு paycell (45) 75900/- க்கு வந்து விட்டார்கள். 2026 ஆண்டு ஜனவரி ஊதிய உயர்வுக்கு payCell நீட்டிக்கப்பட வேண்டும். 9 மாத காலமாகிமும் இன்னும் ஆண்டு ஊதிய உயர்வுக்கு எதிர்பார்ப்போடு காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு pay cell நீட்டிப்புக்கான அரசாணை ஆணை வழங்கிட வேண்டும். 2004-2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டு 1.6.2006 முதல் காலமுறை வரை ஊதியம் பெற்று பணியாற்றி வரும் முதுகலை, பட்டதாரி இடைநிலை ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். 10.3.2021க்கு முன்பு உயர்கல்வி பயின்று நிர்வாக காரணங்களால் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்களுக்கு ஊக்க ஊதிய வழங்கிட வேண்டும்
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளாக பதவி உயர்வு கலந்தாய்வு நீதி மன்ற வழக்குகளால் நடைபெறமால் உள்ளது. நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து பதவி உயர்வு கலந்தாய்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில மாவட்ட, வட்டார ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட மகளீரணிச் செயலாளர் ஜெயலெஷ்மி நன்றியுரையாற்றினார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.