இந்தியன் வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் பீட்ஸ் நிறுவனம் சார்பில் தொழில் முனைவோருக்கான பயிற்சி சான்றிதழ் அளிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதி ராமக்காபேட்டையில் உள்ள பீட்ஸ் தொண்டு நிறுவன அலுவலகத்தில் இந்தியன் வங்கி கிராமபுற உயர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் பீட்ஸ் தொண்டு நிறுவனம் இணைந்து மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கான தேனி வளர்ப்பு மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி முடித்தோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் இந்தியன் வங்கி மூலம் தொழில் கடன் இணைப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இந்திய நாட்டின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு டைரக்டர் கணேசன், மாவட்ட தொழில் மையம் ஜெனரல் மேனேஜர் ரமேஷ், ஆகியோர் கலந்து கொண்டனர். பீட்ஸ் தொண்டு நிறுவன செயலாளர் ராதா மற்றும் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் சங்கர் ஆகியோர் வரவேற்றனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.