திருப்பூர்:
நீதிமன்ற உத்தரவுபடி தங்களுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்யவிடாமல் இடையூறு செய்வதோடு மிரட்டல் விடும் நபர்மீது நடவடிக்கை எடுக்ககோரி கணவன்-மனைவிஅலங்கியம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வினோபா நகரில் வசித்து வருபவர் ஈஸ்வரமூர்த்தி. இவர் தனியார் கார் விற்பனை நிலையத்தில் மேலாளராக பணி புரிந்து வரும் நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு இரண்டு ஏக்கர் நிலத்தை சக்திவேல் என்பவரிடமிருந்து தனது மனைவி ரேவதியின் பெயரில் சுத்த கிரையத்திற்கு வாங்கி தற்போது வரை தாங்கள் அனுபவித்து வருவதாகவும் இந்நிலையில் இந்த நிலத்தின் மீது 2013 ஆம் ஆண்டு வழக்கு ஒன்று இருப்பது தங்களுக்கு தெரியாத நிலையில் நிலத்தை வாங்கி இருந்தாலும் இந்த நிலத்தின் மீது வழக்கு இருப்பது எங்களுக்கு 2019 ஆம் ஆண்டு தான் தெரியவந்தது.
அதை தொடர்ந்து நாங்கள் வழக்கறிஞர் மூலம் வழக்கை நடத்தி வந்தோம். வழக்கின் முடிவில் 2025 ஆம் ஆண்டு நீதிமன்றம் எங்களுக்கு சாதகமான தீர்ப்பளித்தது. இன்று வரை நாங்கள் அனுபவித்து வந்த எங்களுக்குச் சொந்தமான நிலத்தை குடும்பச் சூழல் காரணமாக விற்பனை செய்ய முடிவு எடுத்து எங்களுக்கு தெரிந்த ஒரு நபரிடம் ஒப்பந்தம் செய்து நிலத்தை அவருக்கு விற்பனை செய்வதற்காக முன்பணம் பெற்றுக்கொண்டோம். இந்நிலையில் கோவிந்தராஜ் என்பவர் எங்களது நிலத்தை விற்கவிடாமல் இடையூறு செய்வதோடு நிலத்தை வாங்க வருபவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த நிலத்தின் மீது நான் வழக்கு தொடுக்க உள்ளேன். அதனால் நீங்கள் அந்த நிலத்தை வாங்க கூடாது என மிரட்டி வருகின்றார்.
எங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரமாக உள்ள இந்த நிலத்தை வேண்டுமென்றே விற்பனை செய்ய விடாமல் பல முட்டுக்கட்டைகளை போட்டு வரும் இவர் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் குடும்பத்திற்கு உரிய நீதியை பெற்று தரவேண்டும் என பரிதாபமாக தெரிவித்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.