தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் சிறு குறு தொழில்துறை அமைச்சர் மதன் ராஜாவின் சொந்த தொகுதியான ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணக்கரை பஞ்சாயத்து பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக கூறி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணக்கரை பஞ்சாயத்து சிறு குறு தொழில்துறை அமைச்சரான மதன் ராஜாவின் சொந்த தொகுதியாகும் இந்த கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 

இந்த நிலையில் இந்த கிராமத்திற்கு குடிநீர் வசதி முறையாக கிடைக்காததால் கிராம மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பேருந்து வசதி இல்லாததால் பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவ மாணவிகள் கர்ப்பிணி பெண்கள் முதியவர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 100 நாள் வேலைத்திட்டமும் முறையாக வழங்கப்படவில்லை. 

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மணக்கரை பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர் மதன் ராஜா இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தங்கள் கிராமத்தில் குடிநீர் பிரச்சனை மற்றும் பேருந்து வசதி 100 நாள் வேலை திட்டம் ஆகியவற்றை, முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Related

“பர்கூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் : ‘வாழும் காமராஜர்’ ஐ.உம்மர் பாஷா 19 வது ஆண்டாக 15 லட்சம் மதிப்பில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !”