தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் திட்டத்தை தமிழக அரசு பரிசிலிக்க வேண்டும் தமிழக முதல்வரை நேரடியாக சந்தித்து வலியுறுத்துவேன் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு மற்றும் கோவளம் உள்ளிட்ட பகுதிகளில் 3000 ஏக்கரில் நிலங்களை கையகப்படுத்தி கப்பல் கட்டும் தளம் அமைக்க தமிழக அரசு கொரிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டத்தை கைவிட வலியுறுத்தி அந்த பகுதியைச் சேர்ந்த உப்பு உற்பத்தியாளர்கள் தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதைத் தொடர்ந்து இன்று திருச்செந்தூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் முள்ளக்காடு பகுதியில் வைத்து உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் உட்பட தொழிலாளர்களை சந்தித்து கப்பல் கட்டும் தளம் கொண்டு வந்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்,

தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் மூவாயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு தொழில் செய்யும் நிலங்களை கையகப்படுத்தி கப்பல் கட்டும் தளத்தை உருவாக்க ஹீண்டாய் தென்கொரிய நிறுவனம் தமிழ்நாடு அரசோடு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. கடந்த ஆட்சியின் போது போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தை எதிர்த்துஉப்பள தொழிலாளர்கள் ஏறத்தாழ 50 ஆயிரம் பேர் இந்த தொழிலை நெடுங்காலமாக காலங்காலமாக தலைமுறை தலைமுறையாக செய்யும் அவர்கள் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த கோரிக்கையை விடுதலைச் சிறு கட்சி ஆதரிக்கிறது. 

தமிழ்நாடு அரசு இதனை பரிசிளிக்க வேண்டும் மக்களுடைய ஒப்புதல் இல்லாமல் இசைவுஇல்லாமல் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளக்கூடாது இதை முதலமைச்சரை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்த இருக்கிறோம் மக்களின் போராட்டம் தொடர்கிறது இந்த போராட்டத்தை மதித்து மக்களின் உணர்வுகளை மதித்து தமிழ்நாடு அரசு உப்பள தொழிலை பாதுகாக்க வேண்டும் தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் 

விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் அமைச்சரின் கவனத்திற்கும் முதலமைச்சரின் கவனத்திற்கு நேரடியாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். 

இடதுசாரி கட்சிகள் தொடக்கத்திலிருந்து தவெக ஆட்சி அமைப்பதற்கு மட்டும்தான் ஆதரவு தெரிவிக்கிறோம் என்று கூறி வந்தார்கள். அதன் அடிப்படையில் ஆட்சி தொடர்வதற்கான ஆதரவு எப்போதும் உண்டு. ஆனால் நாங்கள் தாராபுரத்திலும் மதுராந்தகத்திலும் தனித்து நிற்போம் என்று இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன. இது அவர்களுக்கான உரிமை சுதந்திரம் என்றார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சி இப்போது மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியில் இடம் பெற்று இருக்கிறோம். இந்த இரண்டு தொகுதிகளும் இந்த கூட்டணி வெற்றி பெறுவதற்கு ஒத்துழைப்பு நழ்குவோம். 

ஆ ராசாவின் பேச்சு மிகுந்த அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருந்தது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் திமுகவின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவர். அவர் இதுபோன்ற உரையை ஆர்ப்பாட்டத்தில் ஆற்றி இருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. திமுகவுக்கு எதிராக போய் முடியும் அண்மையில் தான் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் யாருடைய மனதையும் காயப்படுத்தக்கூடிய வகையில் எங்கள் இயக்கத் தோழர்கள் பேச மாட்டார்கள். அந்த மாண்பு பாதுகாக்கப்படும் பொருளில் பேசியிருந்தார். 

ஆனால் மக்களவை உறுப்பினர் ஆராசா மற்றும் முன்னணி தலைவர்கள் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆற்றிய உரை என்பது முதலமைச்சரையே ஒருமையில் பேசுவது மற்றும் அவர்களின் பிறப்பு குறித்து கேள்வி எழுப்புவது இது எல்லாம் பெரியார் பாசறையில் வளர்ந்தஹவர்கள் பேச்சாக தெரியவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதான நன்மதிப்பை சீர்குலைக்கும் என்பதை சுட்டிக்காட்ட  விரும்புகிறேன் என்றார்.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”