தூத்துக்குடியில் மாநகராட்சி பள்ளி கழிப்பறைக்குள் புகுந்து ஆசிரியரிடம் 16-பவுன் தங்க நகைகளை பறித்து தப்பி ஓடிய திருடனை ட்ரோன் கேமரா மூலம் தேடும் போலீசார்.

தூத்துக்குடி அருகே  உள்ள  அத்திமரபட்டி பகுதியில்  செயல்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி-யில் ஆசிரியையாக சாந்தி என்பவர் பணியாற்றி வருகின்றார்.
இவர் நேற்று மதியம் பள்ளி வகுப்பறை முடிந்து மதிய உணவு இடைவெளியின் போது கழிப்பறைக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த மர்ம நபர் ஒருவர் கண் இமைக்கும் நொடியில் அந்த ஆசிரியை அணிந்திருந்த 16-பவுன் தங்க நகையை பறித்து அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். அதிர்ச்சியடைந்த அந்த ஆசிரியை கூச்சலிட்டபடி அந்த திருடனை பின் தொடர்ந்து விரட்டி ஓடி உள்ளார். அந்த திருடன் அத்திமரபட்டி பகுதியில் உள்ள வாழை மரம் தோட்டத்திற்குள் ஓடியதால் அவரை கண்டிபிடிக்க முடியாமல் உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார்  அளித்துள்ளார். உடனடியாக முத்தையாபுரம் போலீசார் வாழை தோட்டத்தில் பதுங்கிய திருடனை கண்டிபிடிக்க டோரோன் கேமராவை பயன்படுத்தி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி அருகே பட்ட பகலில் மர்ம நபர் ஒருவர்  பள்ளி கழிப்பறைக்கு சென்ற ஆசிரியை ஒருவர் அணிந்திருந்த 16-பவுன் நகையை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”