தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் 64 டாஸ்மார்க் மது கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் பல பகுதிகளில் உள்ள டாஸ்மார்க் கடைகள் இன்னும் மூடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
தூத்துக்குடி நகரில் உள்ள 7க்கும் மேற்பட்ட டாஸ்மார்க் மது கடைகள் மூடப்பட்ட நிலையில் மக்கள் அதிகம் கூடக்கூடிய பகுதியில் உள்ள டாஸ்மார்க் மது கடைகள் மூடப்படவில்லை இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து திறந்திருந்த டாஸ்மார்க் கடைகளில் மது பிரியர்கள் குவிந்ததால் பல இடங்களில் நெரிசல் ஏற்பட்டது.

அந்த வகையில் தூத்துக்குடி செல்வநாயகபுரம் பகுதியில் உள்ள டாஸ்மார்க் மதுக்கடை மூடப்படாமல் இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் இந்த கடையை திறப்பதற்கு முன்பாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் இந்த பகுதியில் ஒரு பதட்டமான சூழலை உருவானது. தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் போராட்டம் நடத்திய மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் இந்த கடையை அகற்றினால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என பொதுமக்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இந்த டாஸ்மார்க் மதுக்கடை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தையடுத்து தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.