தூத்துக்குடி: வாடகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி துறைமுகத்திற்கு சரக்குகளை ஏற்றி இறக்க கண்டெய்னர்கள் உள்ளே செல்லாததால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட கண்டெய்னர் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் தூத்துக்குடி துறைமுக சுங்க முகவர்கள் சங்கத்தினர் தங்களுக்கு புதிய வாடகை ஒப்பந்த அடிப்படையில் வாடகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை வேண்டும் மேலும் வெளியூர் லோடு ஏற்றி செல்லும் போது வாடகையில் 30% முன்பணமாக வழங்க வேண்டும், வாடகை பில் கொடுத்த 15 நாட்களுக்குள் பணம் வழங்க வேண்டும். கண்டெய்னர் யார்டுக்கு லாரிகள் வந்தவுடன் உடனடியாக லோடு இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சி எப் எஸ் குடோனில் கண்டேய்னர் பெட்டி ஏற்ற இறக்க மாமூல் வாங்க கூடாது. மேலும் தூத்துக்குடி துறைமுகத்தில் நுழைந்த இரண்டு மணி நேரத்திற்குள் கண்டெய்னர் பெட்டியை எட்டாவது மற்றும் ஒன்பதாவது கப்பல் தளத்தில் இறக்கி ஏற்றி விட நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு சரக்குகளை ஏற்றி இறக்க கண்டெய்னர் லாரிகளை அனுப்பாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக நாளொன்றுக்கு சுமார் 2000 கண்டெய்னர் லாரிகள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு மின் சரக்குகளை ஏற்றி இறக்க சென்று வந்த நிலையில் இன்று ஒரு கண்டெய்னர் லாரி கூட தூத்துக்குடி துறைமுகத்திற்குள் உள்ளே செல்லாததால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட கன்டெய்னர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் இந்த விஷயத்தில் உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தூத்துக்குடி துறைமுக சபை நிர்வாகம் ஆகியவை தலையிட்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.