தூத்துக்குடி மாவட்டத்தின் 36-ஆவது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆக இருந்த மதன் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ் பி யாக அபிஷேக் குப்தா நியமனம் செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து இன்று பிற்பகல் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவிற்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்த்தாவை வரவேற்றனர்.
இதை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 36 ஆவது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா பதவி ஏற்றுக்கொண்டார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.