தூத்துக்குடி: தூத்துக்குடியில் 600 மாணவ மாணவிகள் முழங்கால் இட்ட படி ஒரு முட்டியை தரையில் வைத்து ஒரு கையினால் 40 நிமிடம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி உலக சாதனை செய்து காஸ்மிக் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
தூத்துக்குடி சிலுவை பட்டியில் உள்ள முத்து சிலம்பக்கூடம் சார்பில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பக் கலை மாணவ மாணவிகளுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது மேலும் பல்வேறு சாதனை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து இன்று போதை பழக்க வழக்கங்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் செல்போன் பார்ப்பதிலிருந்து மாணவர்கள் விடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் காஷ்மிக் உலக சாதனை புத்தகம் மற்றும் முத்து சிலம்பாட்ட கழகம் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 40 பள்ளிகளை சேர்ந்த ஏழு வயது முதல் 17 வயது நிரம்பிய 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் முழங்கால் இட்டபடி ஒரு முட்டியை தரையில் வைத்து ஒரு கையினால் தொடர்ந்து 40 நிமிடம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.
இந்த உலக சாதனையை காஸ்மிக் உலக சாதனை புத்தக நடுவர் சொக்கலிங்கம் பாலாஜி பார்வையிட்டு சாதனை மாணவ மாணவிகளைமாணவிகளை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.