தூத்துக்குடி : தூத்துக்குடி காவல் நிலையத்தில் மரணம் அடைந்த வாலிபர் அருணாச்சலம் மரணம் குறித்து தமிழக அரசு உண்மை நிலை அறிய வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். நீட் தேர்வு தேவை எனவும் பாஜக நிர்வாகியும் நடிகருமான சரத்குமார் தெரிவித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக நிர்வாகியும், நடிகருமான சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கியதில் அருணாச்சலம் இறந்து இருக்கின்றார் என்று அவரது தாய் கூறியுள்ளார். எனவே உண்மை நிலை அறிய நடந்தது என்ன என்று தமிழக அரசு வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும்.

நீட் தேர்வு அவசியம்., காவல்துறையில் சேர வேண்டுமென்றால் தேர்வு உடற்தகுதி தேர்வு என இருப்பதை போன்று மருத்துவர்களாக சேர்வதற்கு நீட் தேர்வு அவசியம் தான். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது 13 தடவை வினாத்தாள் கசிந்து இருக்கிறது . இது நடக்காத சம்பவம் கிடையாது. நடக்கணும் என்று நான் சொல்லவில்லை. நீட் இருக்கக் கூடாது என்று சொல்வது நியாயம் இல்லை. வெளிநாட்டு சதிக்கு உட்பட்டு இளைஞர்கள் சென்று விடக்கூடாது. இளைஞர்கள் எதற்காக போராட்டம் நடத்துகிறார்கள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

இந்தியா மிக வேகமாக பொருளாதார அடிப்படையில் உயர்ந்து இருக்கிறது. இதனை பொருளாதார நாடாக இருக்கும்போது சீர் குலைக்கும் எண்ணம் இருக்கிறதா என ஐயப்பாடு எழுகிறது. இளைஞர்களை பொறுப்பாக வழி நடத்தும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.
வல்லரசாக இந்தியா வளர்ந்து கொண்டு இருக்கிறது. இது போன்ற செயல்கள் நாட்டை சீர்குலைக்கும் சதி செயல் என்று நினைக்கின்றேன். பொருளாதார அடிப்படையில் உயர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவை சீர்குலைக்கும் சதியில் நாம் சிக்கிக் கொள்ளக் கூடாது என அவர் தெரிவித்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.