பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம் நடத்தினார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி மனைவி உச்சிமாளி (85), குப்புசாமி தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த 1972ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளில், தேசியக் கொடி ஏற்றுவதற்காக கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து பணியிடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், கணவர் பணியின்போது உயிரிழந்த போதிலும், இதுவரை தனக்கு எந்தவித நஷ்டஈடும், ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குப்புசாமி மனைவி உச்சிமாகாளி புகார் மனு அளித்துள்ளார்.
இது குறித்து உயிரிழந்த குப்புசாமி மனைவி உச்சிமாகாளி செய்தியாளர்களிடம் கூறும்போது., தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளராக எனது கணவர் குப்புசாமி பணியாற்றினார். கடந்த 1972ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளில், தேசியக் கொடி ஏற்றுவதற்காக கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து பணியிடத்திலேயே உயிரிழந்தார்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வழிகளில் அரசாங்கத்திடம் மனுக்கள் அளித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். வறுமையில் வாழும் விதவையான தனக்கு கணவரின் பணிக்கால இறப்புக்கான உரிய நஷ்டஈடும் பணிக்கான ஓய்வூதியமும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுத் துறைகளிடம் மனுக்கள் அளித்தும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. ஏழை விதவையான எனக்கு, எனது கணவர் பணியின்போது உயிரிழந்ததற்கான நஷ்ட ஈடும், அவரது பணிக்கான ஓய்வூதியமும் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.