தூத்துக்குடி: தூத்துக்குடியில் உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தின் 444 வது திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘மரியே வாழ்க’ என விண்ணை பிளக்க முழக்கமிட்டனர் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிமய மாதா பேராலயம் உலகப் புகழ்பெற்ற ஆலயமாகும். இந்த ஆலயம் இத்தாலி ரோம் நகரில் அமைந்துள்ள வாடிகன் சிட்டியால் பசிலிகா அந்தஸ்து வழங்கப்பட்ட ஆலயம் ஆகும். இங்கு ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்ட் 5-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம், அந்த வகையில் இந்த ஆண்டு 444-ம் ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. பனிமயமாதா உருவம் பொறித்த கொடியை ஊர்வலமாக பங்கு தந்தைகள் கொண்டுவந்து பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பங்கு தந்தைகள், பொதுமக்கள் கொடியை பிடித்து ஏற்றினர்.

அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘மரியே வாழ்க’ என முழக்கமிட்டனர். மேலும் புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிட்டு கைகளை தட்டி தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர் முன்னதாக மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் கொடியேற்ற திருப்பலி வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும் இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் , மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாவட்ட ஆட்சித் தலைவர் விஷு மகாஜன் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா கலந்து கொண்டனர்.
மேலும் இத்திருவிழாவை முன்னிட்டு 2 ஏடிஎஸ்பிகள் 1 ஏ எஸ் பி, 5 டிஎஸ்பி, 15 இன்ஸ்பெக்டர்கள், 35 எஸ்ஐகள் உட்பட 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் மேலும் பல்வேறு இடங்களில். சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். மேலும் ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் நலன் வேண்டி சிறப்பு திருப்பலிகள் நடைபெறுவதுடன் வருகிற ஆகஸ்ட் 2ஆம் தேதி திவ்ய நற்கருணை பவனி நடைபெற உள்ளது, பணிமயமாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆகஸ்ட் 5ஆம் தேதி திருவிழா திருப்பலி மற்றும் மாதா சப்பரப்பவனி நடைபெற உள்ளது இதை ஒட்டி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை ஜான் செல்வம் செய்திருந்தார்

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.