தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு மதுரா கோட்ஸ் அரசு நில மீட்பு குழு சார்பாக சுதந்திரப் போராட்ட தியாகி வ உ சிதம்பரனார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஏ ஐ சி சி டி யு தேசிய செயற்குழு உறுப்பினர் தோழர் மின்னல் அம்ஜத் தலைமையில், புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மா.மாரி செல்வம் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மதுரா கோட்ஸ் அரசு நிலத்தை தமிழக அரசு மீட்டெடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் மதுரா கோட்ஸ் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் தாயக மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் எஸ். ஆர். அகமது தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு மாநிலத் தலைவர் தூத்துக்குடி சம்சுதீன்
மக்கள் அதிகார கழகம் மாவட்ட செயலாளர் தோழர் தாளமுத்து செல்வா, மக்கள் அதிகார கழகம் தமிழ் வேந்தன், இருதய நண்பர்கள் இயக்கம் மாநில செயலாளர் மா.தங்கையா, இருதய நண்பர்கள் இயக்கம் பொருளாளர் ஏ. பிரின்ஸ், முன்னாள் கவுன்சிலர் எஸ் முகமது ஷாஜகான், அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு பொருளாளர் தூத்துக்குடி நெய்னா முகமது, AICCTU மாநிலத் துணைத் தலைவர் சகாயம், அய்யா வழி கிருஷ்ணவேணி கணேசன், அந்தோணியார் கோவில் மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.