தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக விட்டுவிட்டு பெய்து வரும் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய தொழிலான உப்பு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு செய்து இருந்தது. இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை 3 மணி முதல் தற்போது வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அவ்வப்போது விட்டு விட்டு பரவலாக மாநகர பகுதி முழுவதும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
இந்த மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய தொழிலான உப்பு உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. உப்பள பாத்திகளில் மழை பெய்ததால் உப்பு உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 10,000 மேற்பட்ட உப்பள தொழிலாளர்கள் இன்று வேலை இழந்துள்ளனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.