வெள்ளைய ஆட்சியை எதிர்த்து போராடிய விடுதலைப் போராட்ட வீரரும், மாமன்னருமான புலித்தேவனின் பிறந்த நாள் இன்று (செப்டம்பர் 1) அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, தூத்துக்குடி–எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், புலித்தேவனின் உருவப்படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாமன்னர் புலித்தேவனின் வீரத்தையும், நாட்டுப்பற்றையும் நினைவுகூர்ந்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.