தூத்துக்குடியில் ஆம்னி பேருந்து ஏஜென்ட் அசோசியேஷன் சார்பில் சரஸ்வதி பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

சரஸ்வதி பூஜை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடியில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் தூத்துக்குடி ஆம்னி பேருந்து ஏஜென்ட் அசோசியேசன் சார்பில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. ஆம்னி பேருந்து ஏஜென்ட் அசோசியேசன் செயலாளர் நிலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழாவில் அங்கு வைக்கப்பட்டிருந்த சரஸ்வதி படத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து ஆம்னி பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் அசோசியேஷன் தலைவர் முருகன் பொருளாளர் வில்லியம் மற்றம் ஏராளமான ஆம்னி பேருந்து ஓட்டுநர் நடத்துனர்கள் ஆம்னி பேருந்து ஏஜென்ட் அசோசியேசன் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதைத்தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.