புனித குழந்தை தெரசம்மாவின் திருப்பண்டங்கள் அடங்கிய பேழை, தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு உற்சாக வரவேற்பு தொடர்ந்து ஊர்வலமாக பனிமய மாதா பேராலயம் எடுத்துச் செல்லப்பட்டது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் புனிதர் குழந்தை திரேசால் இவரது உடல் உறுப்புகளில் இவரது கை மற்றும் அவர் பயன்படுத்திய ரோஜாப்பூ மற்றும் புனிதர் குழந்தை திரேசால் எழுதப்பட்ட மறை கடிதம் ஆகியவை நூறு ஆண்டுகளாக ரோம் நகரின் வாடிகன் சிட்டியில் புனித திரேசால் ஆலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த பேழையானது இந்தியா எடுத்துவரப்பட்டு இந்தியா மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு புகழ் மிக்க தேவ ஆலயங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது.  

அந்த வகையில் தூத்துக்குடிக்கு கொண்டுவரப்பட்ட புனித குழந்தை திரேசால் கை மற்றும் ரோஜா பூ மறைக்க கடிதம் ஆகிய அடங்கிய பேழை தூத்துக்குடி பழைய துறைமுக பகுதி அருகே இருந்து பேண்டு வாத்தியங்கள் முழங்க பக்தர்களால் ஊர்வலமாக பங்குத்தந்தை ஜான் செல்வம் உதவி பங்குத்தந்தை ஜெரால்ட் ஆகியோர் தலைமையில் தூத்துக்குடி பணி மய மாதா பேராலயம் கொண்டு செல்லப்பட்டது.  

பின்னர் அங்கு சிறப்பு திருப்பலி நடைபெற்று பக்தர்கள் தரிசனத்திற்காக புனிதர் குழந்தை தெரேசால் பேழை வைக்கப்பட்டது இதை ஏராளமான பக்தர்கள் பக்தியுடன் தரிசனம் செய்தனர் இதைத்தொடர்ந்து இந்த பேழையானது நெல்லை மாவட்ட தேவாலயங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

Related

“நடை பயணத்தில் சாதனை படைக்கும் மதுரை இளைஞர்!”